Advertisement
Advertisement
Advertisement

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான நியூசி அணி அறிவிப்பு!

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் வெஸ்ட் இண்டீஸுக்கு  எதிரான ஒருநாள் மற்றும் டி20  போட்டிகளுக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement
Kane Williamson To Lead New Zealand In Upcoming T20I, ODI Series vs West Indies
Kane Williamson To Lead New Zealand In Upcoming T20I, ODI Series vs West Indies (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 25, 2022 • 09:47 PM

கடந்த 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சென்று விளையாடியதில்லை. இந்நிலையில் கிட்டத்திட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 25, 2022 • 09:47 PM

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடரில் முக்கியமான மூத்த வீரர்களான கேன் வில்லியம்சன், டிம் சௌதீ, டிரெண்ட் போல்ட் ஆகியோர் களமிறங்க உள்ளனர். இவர்களுடன் டெவோன் கான்வேவும் களமிறங்க உள்ளார். 

Trending

நியூசிலாந்தின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட், “நீண்ட வருடத்திற்குப் பிறகு ஒரு இடத்தில் விளையாடப்போகும் போது எப்போதும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். கடந்த வருடம் டி20 கிரிக்கெட்டில் விளையாடியப் பிறகு தற்போதுதான் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விலையாடுகிறார்கள். அதனால் இந்த தொடர் முக்கியமானதாக அமையும். மேலும் சில புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார். 

நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், டிரெண்ட் போல்ட், மைக்கெல் பிரேஸ்வெல், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மார்டின் கப்டில், மாட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சௌதீ. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement