Advertisement

ஐபிஎல் திருவிழா 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் லக்னோ அணியும், கடந்த ஆட்டத் தோல்வியிலிருந்து மீண்டெழும் தாகத்துடன் டெல்லி அணியும் இருக்கின்றன.

Advertisement
Lucknow Super Giants vs Delhi Capitals – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
Lucknow Super Giants vs Delhi Capitals – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 07, 2022 • 10:11 AM

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 15ஆவது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 07, 2022 • 10:11 AM

போட்டி தகவல்கள்

Trending

  • மோதும் அணிகள் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ்
  • இடம் - டி ஒய் பாட்டில் மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

நடப்பு ஐபிஎல் தொடரில் அறிமுக அணியாக இடம் பிடித்துள்ள கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 5ஆம் இடத்தில் உள்ளது. முந்தைய சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிரான ஆட்டத்தில் கேப்டன் கே.எல். ராகுல், தீபக் ஹூடாவின் அரை சதமும், கடைசி ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் ஜாசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகள்  வீழ்த்தியதும் வெற்றிக்கு வழிவகுத்தது. 

அதற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 211 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து அசத்தினர். தற்போது ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன் டெல்லியை சந்திக்கிறது லக்னோ அணி.

அதேபோல் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தலா ஒரு வெற்றி தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 7ஆம் இடத்தில் உள்ளது. தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்த டெல்லி அணி அடுத்த ஆட்டத்தில் குஜராத்திடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. 

இந்நிலையில் தனிமைப்படுத்துதலை முடித்துவிட்டு பயிற்சிக்கு திரும்பியுள்ள ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டேவிட் வார்னர், லக்னோ அணியுடனான இன்றைய போட்டியில் பங்கேற்பார் எனத் தெரிகிறது. அதே போல் உடல்தகுதி தேர்வை முடித்துவிட்டு வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்ஜேவும் இன்றைய ஆட்டத்தில் விளையாட தயாராக இருக்கிறார். இவர்களது வருகை டெல்லி அணிக்கு மேலும் வலுச்சேர்க்கும்.

'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் லக்னோ அணியும், கடந்த ஆட்டத் தோல்வியிலிருந்து மீண்டெழும் தாகத்துடன் டெல்லி அணியும் இருக்கின்றன. இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.

உத்தேச அணி

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கே.எல். ராகுல் (கே), குயின்டன் டி காக், மணீஷ் பாண்டே, எவின் லூயிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி, க்ருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னோய், அவேஷ் கான்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் - பிருத்வி ஷா, டேவிட் வார்னர், மன்தீப் சிங்/ சர்ஃபராஸ் கான், ரிஷப் பந்த் (கே), லலித் யாதவ், ரோவ்மன் பாவல், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அன்ரிச் நோர்ட்ஜே, முஸ்தாபிசுர் ரஹ்மான்

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - ரிஷப் பந்த், கேஎல் ராகுல், குயின்டன் டி காக்
  • பேட்டர்ஸ் - டேவிட் வார்னர், எவின் லூயிஸ், ஆயுஷ் பதோனி
  • ஆல்-ரவுண்டர்கள் - லலித் யாதவ், ஜேசன் ஹோல்டர்
  • பந்துவீச்சாளர்கள் - குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, ரவி பிஷ்னோய்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement