தி ஹண்ரட்: வெல்ஷ் ஃபையரை வீழ்த்தி மான்செஸ்டர் அபார வெற்றி!
வெல்ஷ் ஃபயர் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தி ஹண்ரட் ஆடவர் தொடரில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் வெல்ஷ் ஃபையர் - மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற வெல்ஷ் ஃபையர் முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணி 100 பந்துகளில் 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக லியஸ் டு ப்ளாய் 43 ரன்களையும், டக்கெட் 32 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்கு ஜோ கிளர்க் - பிலிப் சால்ட் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் கிளர்க் அரைசதம் கடக்க, பிலிப் சால்ட் 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின் களமிறங்கிய காலின் முன்ரோ அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன் மூலம் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி 95 பந்துகளிலேயே இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now