Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் திருவிழா 2022: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

ஐபிஎல் 2022: இன்று நடைபெறும் 9ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan April 02, 2022 • 11:43 AM
Mumbai Indians vs Rajasthan Royals, IPL 2022 – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable
Mumbai Indians vs Rajasthan Royals, IPL 2022 – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனின் இன்றைய நாளில் இரண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

இந்த போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நாவிமும்பையில் உள்ள டாக்டர் டி ஒய் பட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது.

Trending


போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • இடம் - டிஒய் பட்டீல் மைதானம், நவி மும்பை
  • நேரம் - பிற்பகல் 3.30 மணி

போட்டி முன்னோட்டம்

இரு அணிகளும் இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டியை மட்டுமே விளையாடியுள்ளது. மும்பை அணி தனது முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. மறுபக்கம் தனது முதல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ், 61 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. இதுவரை இந்த சீசனில் நடந்த போட்டிகளிலேயே, ராஜஸ்தான் ராயல்ஸ் மட்டும் தான் முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளது.

டெல்லியுடன் நடந்த போட்டியில், மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் அதிகபட்சமாக இஷான் கிஷன் 81 ரன்களும் ரோஹித் ஷர்மா 41 ரன்களும் எடுத்தனர். ஆனால் டெல்லி அணியில்லலித் யாதவ், அக்சர் படேல், பிருத்வி ஷா போன்றோரின் அதிரடியான ஆட்டத்தால் டெல்லி வெற்றிபெற்றது. 

மறுபக்கம், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதும்போது, சஞ்சு சாம்சன், படிக்கல், ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடினர். பவுலிங்கிலும், சாஹால், பிரசித் கிருஷ்ணா, ட்ரெண்ட் போல்ட் போன்ற பவுலர்கள் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தனர். இரு பக்கமும் அதிரடி வீரர்கள் உள்ளதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 24
  • மும்பை வெற்றி - 13
  • ராஜஸ்தான் வெற்றி - 11

உத்தேச லெவன்:

மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், கீரன் பொல்லார்ட், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ்/ரிலே மெரிடித், முருகன் அஷ்வின், ஜஸ்பிரிட் பும்ரா, டைமல் மில்ஸ், பாசில் தம்பி.

ராஜஸ்தான் ராயல்ஸ் - யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கே), ஷிம்ரோன் ஹெட்மையர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஸ்வின், நாதன் குல்டர் நைல், யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - இஷான் கிஷன், ஜோஸ் பட்லர்
  • பேட்டர்ஸ் - ஷிம்ரான் ஹெட்மையர், தேவ்தத் பாடிக்கல், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரியான் பராக்
  • பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா, டைமல் மில்ஸ், ஜஸ்பிரித் பும்ரா.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement