Advertisement
Advertisement
Advertisement

NED vs IRE, 2nd ODI: டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்!

நெதர்லாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan June 04, 2021 • 13:54 PM
 Netherlands has won the toss and will bat first
Netherlands has won the toss and will bat first (Image Source: Google)
Advertisement

அயர்லாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நெதர்லாந்து சென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி  உட்ரெக்ட்டில் உள்ள ஸ்போர்ட் பார்க் மார்ஷல் கர்வீர்ட் மைதானத்தில் நேற்று முந்தினம் நடைபெற்றது. 

இப்போட்டியில் நெதர்லாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. 

Trending


இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி கேப்டன் பீட்டர் சீலர் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளார். இன்றைய போட்டிகான இரு அணியிலும் எந்தவொரு மாற்றமும் இன்றி களமிறங்குகின்றனர். 

அயர்லாந்து அணி: ஆண்ட்ரூ பால்பிர்னி (கேப்டன்),பால் ஸ்டிர்லிங்,ஜார்ஜ் டோக்ரெல்,ஜோஷ் லிட்டில், ஆண்ட்ரூ மெக்பிரைன், பேரி மெக்கார்த்தி, வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட்,சிமி சிங், ஹாரி டெக்டர், லோகன் டக்கர், கிரேக் யங்.

நெதர்லாந்து அணி: ஸ்டீபன் மைபர்க், மேக்ஸ் ஓடவுட், பென் கூப்பர், பீட்டர் சீலார் (கே), ஸ்காட் எட்வர்ட்ஸ், பாஸ் டி லீட், லோகன் வான் பீக், சாகிப் சுல்பிகர், பிராண்டன் குளோவர், டிம்ம் வான் டெர் குக்டன், பிரெட் கிளாசென்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement