Advertisement
Advertisement
Advertisement

இந்த ஆட்டமே எங்களுக்கு வெற்றி பெற்றது போன்று தான் உள்ளது - நிக்கோலஸ் பூரன்!

இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும் இனி வரும் இரண்டு போட்டிகளை நாங்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள காத்திருக்கிறோம் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 23, 2022 • 12:57 PM
Nicholas Pooran urges WI teammates to take positives after losing thriller vs India: Feels like a wi
Nicholas Pooran urges WI teammates to take positives after losing thriller vs India: Feels like a wi (Image Source: Google)
Advertisement

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று டிரினிடாட் நகரில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்நிலையில் சமீப காலமாகவே ஒருநாள் போட்டிகளில் திணறிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. 

Trending


இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டிஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான், “இந்த ஆட்டமே எங்களுக்கு வெற்றி பெற்றது போன்று தான் உள்ளது. ஏனெனில் நாங்கள் சமீபமாகவே நிறைய பேசி வருவது யாதெனில் 50 ஓவர்கள் முழுமையாக விளையாட வேண்டும் என்பது மட்டும்தான்.

அந்த வகையில் நாங்கள் 50 ஓவர்களையும் முழுமையாக விளையாடும் அளவிற்கு தகுதியான அணி தான் என்று இந்த போட்டியில் நிரூபித்துள்ளோம். நிச்சயமாக இனிவரும் போட்டிகளில் எங்களுடைய பலத்தை அதிகரித்துக் கொண்டே செல்வோம். இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும் இனி வரும் இரண்டு போட்டிகளை நாங்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள காத்திருக்கிறோம். இந்த மைதானத்தில் எங்களது பவுலர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனாலும் பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

இறுதி வரை போராட்டத்தை அளித்து கடைசியில் தோல்வியை சந்தித்தது சற்று வருத்தமாக இருந்தாலும் சவால்களை எதிர்த்து எங்கள் அணி வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமை அடைகிறேன். இந்த தோல்வியின் மூலமாக கிடைத்த நல்ல பாசிட்டிவான விஷயங்களை அடுத்த போட்டிக்கு கொண்டு சென்று நிச்சயம் வெற்றி பெற முயற்சிப்போம்” என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement