PAK vs AUS, 2nd Test (Day 1, lunch): மீண்டும் அசத்திய கவாஜா; ஏமாற்றிய வார்னர், லபுசாக்னே!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களைச் சேர்த்தது.
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் - உஸ்மான் கவாஜா இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தது.
Trending
பின்னர் 36 ரன்கள் எடுத்திருந்த டேவிட் வார்னர் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மார்னஸ் லபுசாக்னே ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உஸ்மான் கவாஜா அரைசதம் கடந்து அசத்தினார்.
இதன்மூலம் முதல் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களைச் சேர்த்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now