Advertisement

பிஎஸ்எல் 2022 எலிமினேட்டர்: இஸ்லாமாபாத்திற்கு 170 டார்கெட்!

பிஎஸ்எல் 2022 எலிமினேட்டர்: இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பேஷ்வர் ஸால்மி அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan February 24, 2022 • 21:59 PM
PSL 2022 Eliminator: Peshwar Zalmi finishes off 169/5
PSL 2022 Eliminator: Peshwar Zalmi finishes off 169/5 (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் எலிமினேட்டர்  ஆட்டத்தில் பேஷ்வர் ஸால்மி - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

இப்போட்டியில் டாஸ் வென்ற பேஷ்வர் ஸால்மி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பெஷ்வர் அணியில் முகமது ஹேரிஸ், யாஷிர் கான் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

Trending


பின்னர் ஜோடி சேர்ந்த காம்ரன் அக்மல் - சோயிப் மாலிக் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதமும் கடந்தனர். 

அதன்பின் காம்ரன் அக்மல் 58 ரன்களிலும், சோயிப் மாலிக் 55 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பேஷ்வர் ஸால்மி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களைச் சேர்த்தது. 

இஸ்லாமாபாத் யுனைடெட் அணி தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement