Advertisement

பிஎஸ்எல் 2022: டிம் டேவிட், ரொஸ்ஸோ அதிரடி; இஸ்லாமாபாத்திற்கு 218 இலக்கு!

பிஎஸ்எல் 2022: இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 218 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 01, 2022 • 21:51 PM
PSL 2022: Multan Sultans finishes off 217/5
PSL 2022: Multan Sultans finishes off 217/5 (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்று வரும் 8ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணியில் முகமது ரிஸ்வான், சோயிப் மக்சூத் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

Trending


இதையடுத்து ஜோடி சேர்ந்த ஷான் மசூத் - ரிலே ரோஸ்ஸோ இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது. பின்னர் 43 ரன்னில் மசூத் ஆட்டமிழக்க, அடுத்து களமிறக்கிய டிம் டேவிட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தர். 

அதேபோல் மறுமுனையிலிருந்த ரொஸ்ஸோவும் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய டிம் டேவிட் 71 ரன்னில் ஆட்டமிழக்க, ரொஸ்ஸோ இறுதிவரை ஆட்டமிழக்கமால் 67 ரன்களைச் சேர்த்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களைக் குவித்தது. இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி விளையாடவுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement