பிஎஸ்எல் 2021: பந்துவீச்சாளர்கள் உதவியால் முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி!
பிஎஸ்எல் 2021: குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி ஷான் மசூதின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களைச் சேர்த்தது. இதில் ஷான் மசூத் 88 ரன்களை விளாசினார்.
Trending
அதன்பின் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிளாடியேட்டர்ஸ் அணியில் வில் ஸ்மீத் 3 ரன்னிலும், அஹ்சன் அலி 24 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அடுத்து களமிறங்கிய பென் டக்கெட் 47 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 19.5 ஓவர்களிலேயே குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்களை மட்டுமே எடுத்தது.
முல்தான் சுல்தான்ஸ் அணி தரப்பில் குஷ்டில் ஷா, டேவிட் வில்லி, இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் குயிட்டா கிளாடியேட்டர்சை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now