Advertisement

பெண் குழந்தைக்கு தந்தையானார் டி காக்!

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குயின்டன் டி காக்குக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 07, 2022 • 19:28 PM
Quinton de Kock and wife Sasha blessed with a baby girl
Quinton de Kock and wife Sasha blessed with a baby girl (Image Source: Google)
Advertisement

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் குயிண்டன் டி காக். இவர் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களின் மிகவும் மதிப்புமிக்க வீரராகவும் உள்ளார். இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு சாஷா என்ற பெண்ணை அவர் திருமணம் செய்துகொண்டார். 

இந்நிலையை குயிண்டன் டி காக்- சாஷா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை அவர்  தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் .

Trending


மேலும் அந்த குழந்தைக்கு ‘கியாரா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது  என அவர் தெரிவித்துள்ளார் . இதை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

முன்னதாக கடந்த வாரம் குயின்டன் டி காக் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement