Advertisement

ஐபிஎல் திருவிழா 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் – லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan April 10, 2022 • 11:51 AM
Rajasthan Royals vs Lucknow Super Giants, IPL 2022 – Cricket Match Prediction, Fantasy XI Tips & Pro
Rajasthan Royals vs Lucknow Super Giants, IPL 2022 – Cricket Match Prediction, Fantasy XI Tips & Pro (Image Source: Google)
Advertisement

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள 20ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதவுள்ளது.

போட்டி தகவல்கள் 

Trending


  • மோதும் அணிகள் - ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
  • இடம் - வான்கடே மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி தகவல்கள்

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி என 4 புள்ளிகளுடன் பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ளது.  பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழும் ராஜஸ்தான் அணியில் கவனிக்கத்தக்க வீரராக உள்ள ஜோஸ் பட்லர் ஒரு சதம், ஒரு அரை சதம் அடித்துள்ளார். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் பவுல்ட் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அறிமுக அணியாக இடம்பிடித்துள்ள கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, 4 போட்டிகளில் விளையாடி, 3 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது. இந்த சீசனில் வலுவான நிலையில் உள்ள லக்னோ, இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்புடன் தீவிரமாக ஆடிவருகிறது. பேட்டிங்கில் குயின்டான் டி காக், கேப்டன் லோகேஷ் ராகுல், தீபக் ஹூடோ, பதோனி கைகொடுக்கிறார்கள்.

உத்தேச அணி

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கேஎல் ராகுல் (கே), குயின்டன் டி காக், எவின் லூயிஸ், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, ஆயுஷ் பதோனி, கிருஷ்ணப்ப கவுதம், ஜேசன் ஹோல்டர், அவேஷ் கான், ரவி பிஷ்னோய் , ஆண்ட்ரூ டை.

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கே), ஷிம்ரோன் ஹெட்மையர், ரியான் பராக்/ ஜிம்மி நீஷம், ஆர் அஷ்வின், நவ்தீப் சைனி, ட்ரெண்ட் போல்ட், பிரஷித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - குயின்டன் டி காக், கேஎல் ராகுல், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்
  • பேட்டர்ஸ் - ஆயுஷ் படோனி, ஷிம்ரோன் ஹெட்மையர்
  • ஆல்-ரவுண்டர்கள் - தீபக் ஹூடா
  • பந்துவீச்சாளர்கள் - ரவி பிஷ்னோய், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் போல்ட்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement