Advertisement
Advertisement
Advertisement

தென் ஆப்பிரிக்க தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு!

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் 14 பேர் அடங்கிய இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 04, 2022 • 13:22 PM
Robinson in England's squad of 14 for first two Tests against South Africa
Robinson in England's squad of 14 for first two Tests against South Africa (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 தொடரில் விளையாடியது. ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமமானது. டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 17ஆம் தேதி தொடங்கிறது. இதையடுத்து முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending


இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன் இடம் பிடித்துள்ளார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ்சுற்றுப்பயணத்திலிருந்து ராபின்சன் விளையாடவில்லை.

அதேசமயம் இந்திய டெஸ்டின் போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பென் ஃபோக்ஸ் மீண்டும் அணியின் இணைந்துள்ளார். நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகவில்லை என்றாலும், ஹாரி புரூக் அணியில் மீண்டும் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

மேலும் சீனியர் வீரர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோருடன் சாம் பில்லிங்ஸும் அணியில் இடம்பிடித்துள்ளார். 

இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ்(கே), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், ஜாக் கிராலி, பென் ஃபோக்ஸ், ஜாக் லீச், அலெக்ஸ் லீஸ், கிரேக் ஓவர்டன், மேத்யூ பாட்ஸ், ஆலி போப், ஒல்லி ராபின்சன்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement