Advertisement

ஸ்காட்லாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஸ்காட்லாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று எடின்பர்க்கில் நடைபெறவுள்ளது.

Advertisement
ஸ்காட்லாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஸ்காட்லாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 07, 2024 • 12:44 PM

Scotland vs Australia 3rd T20I Dream11 Prediction: ஆஸ்திரேலிய அணியானது முதல் முறையாக ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியானது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று எடின்பர்க்கில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றுள்ளதால் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முயற்சியில் விளையாடவுள்ளது. அதேசமயம் தோல்வியில் இருந்து மீளும் முயற்சியில் ஸ்காட்லாந்து அணியும் செயல்படும் என்பதால்  இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 07, 2024 • 12:44 PM

SCO vs AUS 3rd T20I : போட்டி தகவல்கள்

Trending

  • மோதும் அணிகள் - ஸ்காட்லாந்து vs ஆஸ்திரேலியா
  • இடம் - கிரேஞ்ச் கிரிக்கெட் கிளப், எடின்பர்க்
  • நேரம் - செப்டம்பர் 07, இரவு 6.30 மணி (இந்திய நேரப்படி)

SCO vs AUS 3rd T20I: Pitch Report

எடின்பர்க்கில் உள்ள கிரெஞ்ச் கிரிக்கெட் மைதானமானது பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு சமமான சாதகத்தை வழங்கும் மைதாங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி 166 ரன்களாக உள்ள நிலையில், இரண்டாவது இன்னிங்ஸின் சராசரியானது 132 ரன்களாக உள்ளது. அதேசமயம் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 254 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

SCO vs AUS 3rd T20I: Where to Watch?

ஆஸ்திரேலியா - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரை ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். ஆனால் இத்தொடரை எந்த தொலைக்காட்சி நிறுவனம் நேரலையில் ஒளிபரப்பு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCO vs AUS 3rd T20I: Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 03
  • ஸ்காட்லாந்து - 00
  • ஆஸ்திரேலியா - 03

Scotland vs Australia 3rd T20I: Probable Playing XI

ஸ்காட்லாந்து உத்தேச லவன்: ஜார்ஜ் முன்சி, ஒல்லி ஹேர்ஸ், பிராண்டன் மெக்முல்லன், ரிச்சி பெரிங்டன் (கே), மேத்யூ கிராஸ் , மைக்கேல் லீஸ்க், மார்க் வாட், ஜாக் ஜார்விஸ், சார்லி கேசல், ஜாஸ்பர் டேவிட்சன், பிராட் வீல்

ஆஸ்திரேலியா உத்தேச லெவன்: டிராவிஸ் ஹெட், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், மிட்செல் மார்ஷ் (கே), ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், ஆடம் ஸாம்பா, ரைலி மெரிடித்

Scotland vs Australia 3rd T20I: Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - மேத்யூ கிராஸ், ஜோஷ் இங்கிலிஸ்
  • பேட்ஸ்மேன்கள் - டிராவிஸ் ஹெட்(கேப்டன்), ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ஜார்ஜ் முன்ஸி, பிராண்டன் மெக்முல்லன்
  • ஆல்ரவுண்டர் - மார்கஸ் ஸ்டொய்னிஸ் (துணைக்கேப்டன்), மைக்கேல் லீஸ்க்
  • பந்துவீச்சாளர்கள் - சீன் அபோட், ஆடம் ஸாம்பா, பிராட் வீல்

SCO vs AUS Dream11 Prediction, SCO vs AUS 3rd T20, Today Match SCO vs AUS, SCO vs AUS Dream11 Team, Fantasy  Cricket Tips, SCO vs AUS Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Scotland vs Australia

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement