Advertisement

SCO vs ZIM: மில்டன் ஷும்பா அதிரடியில் தொடரை வென்றது ஜிம்பாப்வே!

ஸ்காட்லாந்து அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Advertisement
SCO vs ZIM: Zimbabwe win the series 2-1
SCO vs ZIM: Zimbabwe win the series 2-1 (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 19, 2021 • 10:12 PM

ஸ்காட்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமநிலையில் இருந்தன.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 19, 2021 • 10:12 PM

இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணியில் கொட்ஸர், ஹர்ஸ் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

Trending

அதன்பின் ஜோடி சேர்ந்த முன்சே - பெர்ரிங்டன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் பெர்ரிங்டன் 44 ரன்களில் ஆட்டமிழக்க, முன்சே அரைசதம் அடித்து அசத்தினார். பின் முன்சேவும் 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய மெக்லிட் அதிரடியாக விளையாடி 39 ரன்களைச் சேர்த்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து கடின இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர்களான சகப்வா, கிரேக் எர்வின் தலா 25 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த சீன் வில்லியம்ஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த வெஸ்லி மாதேவெரே - மில்டன் ஷும்பா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மில்டன் ஷும்பா 66 ரன்களைச் சேர்த்தார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதன்மூலம் 19.1 ஓவர்களிலேயே ஜிம்பாப்வே அணி வெற்றி இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஜிம்பாப்வே அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement