Advertisement

டி20 உலகக்கோப்பை 2022: பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan September 15, 2022 • 19:30 PM
Shaheen Afridi Returns While Fakhar Zaman Misses Out As Pakistan Announce Squad For T20 World Cup
Shaheen Afridi Returns While Fakhar Zaman Misses Out As Pakistan Announce Squad For T20 World Cup (Image Source: Google)
Advertisement

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 போட்டிகள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. 

இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக பிரதான சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.

Trending


பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல வீரர் ஃபகார் ஸமான் மாற்று வீரராக அணியில் இடம்பெற்றுள்ளார். அதேசமயம் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய ஷாஹின் ஷா அஃப்ரிடி மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

பாகிஸ்தான் அணி: பாபர் ஆசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், இஃப்திகார் அஹமது, குஷ்தில் ஷா, ஹைதர் அலி, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், முகமது ஹஸ்நைன், நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப், ஷாஹீன் அஃப்ரிடி, ஆசிஃப் அலி, ஷான் மசூத், உஸ்மான் காதிர். 

மாற்று வீரர்கள்: ஃபகார் ஸமான், முகமது ஹாரிஸ், ஷாநவாஸ் தஹானி. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement