Advertisement

IND vs NZ: முதல் டெஸ்ட் டிரா ஆனது குறித்து ஷேன் வார்னே கருத்து!

பழைய பந்திலேயே 4 ஓவர்களை கூடுதலாக வீசியது தான் திருப்பு முனையாக அமைந்து விட்டது என இந்தியா - நியூசிலாந்து போட்டி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

Advertisement
Shane Warne left baffled, points out India's 'strange tactic' during Day 5 of drawn Kanpur Test
Shane Warne left baffled, points out India's 'strange tactic' during Day 5 of drawn Kanpur Test (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 30, 2021 • 12:06 PM

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய கான்பூர் டெஸ்ட் டிரா ஆனதற்குக் காரணம் ரகானே செய்த மிகப்பெரிய தவறுதான் என்கிறார் ஷேன் வார்னே. அதாவது 4ஆம் நாள் இந்திய அணி டிக்ளேர் செய்ததற்கான தாமதம் அல்ல, அது சரிதான், ஆனால் இன்னொரு முக்கியமான தவறை இந்தியா செய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
November 30, 2021 • 12:06 PM

நேற்று 5ஆம் நாள் ஆட்டத்தில் ஆட்டம் முடியும் தருணத்தில் வெளிச்சம் போய்க்கொண்டிருந்தது, அதனால் லைட் மீட்டரை வைத்து நடுவர்கள் சரிபார்த்து சரிபார்த்து ஓவரை வீச அனுமதித்தனர். கடைசியில் 90 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்டது, ராச்சின் ரவீந்திரா 91 பந்துகள் ஆடி 18 ரன்கள் எடுக்க, ஆஜாஸ் படேல் அவருக்கு உறுதுணையாக ஆட முதல் டெஸ்ட் டிரா ஆனது. 
சமீப காலத்தில் எதிரணியின் 20 விக்கெட்டுகளை இந்திய பவுலர்கள் எடுக்காமல் இருந்ததில்லை என்பதுதான்.

Trending

நேற்று கடைசி விக்கெட் ஆடும்போது வேகப்பந்து வீச்சுக்கு கொடுக்காமலே விட்டதும் ஒரு தவறு. ரஹானே பொதுவாக நன்றாக கேப்டன்சி செய்யக்கூடியவர். அவரால் எப்படி இப்படி செய்ய முடிந்தது? ஆனால் இதுவும் அல்ல ஷேன் வார்ன் கூறும் காரணம், இதை விடவும் முக்கியமானதை அவர் கூறுகிறார்:

இதுகுறித்து பேசிய அவர், “80 ஓவர்கள் முடிந்து இன்னொரு புதிய பந்தை எடுக்க வாய்ப்பிருந்தும் இந்தியா எடுக்காமல் பழைய பந்திலேயே வீசியது ஆச்சரியமாக உள்ளது. வெளிச்சமும் குறைந்து வந்தது, ஓவர்களும் முடிந்து கொண்டிருந்தன, ஆனால் பழைய பந்திலேயே வீசினார்கள் இது விசித்திரம்தான்.

பழைய பந்திலேயே 4 ஓவர்களை கூடுதலாக வீசியது தான் திருப்பு முனையாக அமைந்து விட்டது. இதனால் நியூசிலாந்து தப்பியது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement