இந்திய ஏ அணியிலிருந்து விலகிய பிரஷித் கிருஷ்ணா!
வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணாவுக்குக் காயம் ஏற்பட்டதையடுத்து இந்திய ஏ அணியில் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி ஏ அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களிலும் 3 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடுகிறது.
பெங்களூரில் நடைபெற்ற முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டம் டிரா ஆனது. இந்நிலையில் முதுகு வலி காரணமாக இந்தத் தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா விலகியுள்ளார்.
Trending
இதையடுத்து ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்குர் இந்திய ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் ஆட்டத்தில் பிரஷித் கிருஷ்ணா விளையாடவில்லை. தாய்லாந்தில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருக்கும் ஷர்துல் தாக்குர், இந்திய ஏ அணியினருடன் விரைவில் இணையவுள்ளார்.
இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகளுக்கிடையிலான 2ஆவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட், செப்டம்பர் 8 அன்று தொடங்குகிறது.
Win Big, Make Your Cricket Tales Now