Advertisement
Advertisement
Advertisement

SA vs AUS: ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க் விலகல்!

தென் ஆப்பிரிக்க தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் காயம் காரணமாக விளகியுள்ளனர்.

Advertisement
SA vs AUS: ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஸ்டீவ் ஸ்மிட், மிட்செல் ஸ்டார்க் விலகல்!
SA vs AUS: ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஸ்டீவ் ஸ்மிட், மிட்செல் ஸ்டார்க் விலகல்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 18, 2023 • 03:09 PM

இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன. அதன்படி ஒவ்வொரு அணியும் பிற நாடுகளுடன் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 18, 2023 • 03:09 PM

அந்தவகையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடருக்கான இரு அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.

Trending

இந்நிலையில் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளனர். இருப்பினும் இவரும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக குணமடைந்து அணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கா ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபேட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ் , டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement