கங்குலியின் மகளுக்கு கரோனா!
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் மகளுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Sourav Ganguly's daughter, 3 other family members test COVID positive (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கடந்த டிசம்பர் மாதம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த கங்குலி கரோனாவில் இருந்து மீண்டார். அவரை 2 வாரங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
Trending
இந்நிலையில் தற்போது கங்குலியின் மகள் சனாவிற்கு கரோனா தொற்று உறுதியானது. அவர் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பெயரில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.
இதை தொடர்ந்து கங்குலியின் மனைவி டோனாவிற்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News