Advertisement

டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் 30ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

Advertisement
South Africa vs Bangladesh, T20 World Cup – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
South Africa vs Bangladesh, T20 World Cup – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 01, 2021 • 02:28 PM

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் 30ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
November 01, 2021 • 02:28 PM

போட்டி தகவல்கள்

Trending

  • மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம்
  • இடம் - ஷேக் சயீத் மைதானம், அபுதாபி
  • நேரம் - மாலை 3.30 மணி

போட்டி முன்னோட்டம்

டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் 2 வெற்றியைச் சந்தித்து குரூப் 1 புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடத்தில் நீடித்து வருகிறது. 

இன்னும் அந்த அணி இனிவரும் போட்டிகளில் வெற்றிபெற்றால் நிச்சயம் அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

அதேபோல் வங்கதேச அணி இந்த சீசனில் விளையாடிய அனைத்து சூப்பர் 12 போட்டியிலும் தோல்வியைத் தழுவி அரையிறுதிக்கான வாய்ப்பை தவறவிட்டுள்ளது. 

மேலும் அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளதால் அந்த அணி இப்போட்டியில் எவ்வாறு வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் நிலவிவருகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 6
  • தென் ஆப்பிரிக்கா - 6
  • வங்கதேசம் - 0

உத்தேச அணி
தென்ஆப்பிரிக்கா -
டெம்பா பவுமா (கே), குயின்டன் டி காக், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ரீசா ஹென்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், டுவைன் பிரிட்டோரியஸ், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி

வங்கதேசம்- சௌமியா சர்க்கார், முகமது நைம், லிட்டன் தாஸ், ஷமிம் ஹொசைன், முஷ்பிக்கூர் ரஹீம், மஹ்முதுல்லா (கே), அஃபிஃப் ஹொசைன், மஹேதி ஹசன், ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிசூர் ரஹ்மான், தஸ்கின் அகமது

Also Read: T20 World Cup 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - குயின்டன் டி காக்
  • பேட்டர்ஸ் - முஷ்பிக்கூர் ரஹீம், நைம் ஷேக், மஹ்முதுல்லா, ரஸ்ஸி வான் டெர்-டுசென்
  • ஆல்-ரவுண்டர்கள் - மகேதி ஹசன், டுவைன் பிரிட்டோரியஸ், ஐடன் மார்க்ரம்
  • பந்துவீச்சாளர்கள் - முஸ்தாபிசூர் ரஹ்மான், அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement