டி20 உலகக்கோப்பை: வங்கதேச அணிக்கு 141 ரன்கள் இலக்கு!
வங்கதேச அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 141 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்றுவரும் 2ஆவது தகுதிச்சுற்றுப் போட்டியில் வங்கதேசம் - ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கும் ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் நட்சத்திர வீரர்கள் கைல் கொட்சர், மேத்யூ கிராஸ், ஜார்ஜ் முன்சே, ரிச்சி பெர்ரிங்டன் என அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Trending
அதன்பின் ஜோடி சேர்ந்த கிறிஸ் கிரீவ்ஸ் - மார்க் வாட் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. பின் மார்க் வாட் 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கிரீவ்ஸ் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் மெஹதி ஹசன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Win Big, Make Your Cricket Tales Now