Advertisement

டி20 உலகக்கோப்பை: நமீபியாவை வீழ்த்தியது ஆஃப்கானிஸ்தான்!

டி20 உலகக்கோப்பை: நமீபியா அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan October 31, 2021 • 18:58 PM
T20 WC 27th Match: Afghanistan beat Namibia by 62 runs
T20 WC 27th Match: Afghanistan beat Namibia by 62 runs (Image Source: Google)
Advertisement

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி நபி, ஷசாத் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களைச் சேர்த்தது. 

Trending


ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது ஷசாத் 45 ரன்களையும், முகமது நபி 32 ரன்களையும் சேர்த்தனர். நமீபியா அணி தரப்பில் ட்ரெம்பால்மென், ஜான் நிக்கோல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து கடின இலக்கைத் துரத்திய நமீபியா அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 9 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. 

Also Read: T20 World Cup 2021

இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement