Advertisement

டி20 உலகக்கோப்பை: மேக்ஸ் ஓடவுட் அதிரடியில் 165 ரன்களை இலக்காக நிர்ணயித்த நெதர்லாந்து!

நமீபியா அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
T20 World Cup: Max ODowd Helps Netherlands Post 164/4 Against Namibia
T20 World Cup: Max ODowd Helps Netherlands Post 164/4 Against Namibia (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 20, 2021 • 05:25 PM

டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் சுற்றின் 7ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 20, 2021 • 05:25 PM

அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு மேக்ஸ் ஓடவுட் - மைபர்க் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் மைபர்க் 17 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த வென்டெர் மெர்வே 6 ரன்களில் வெளியேறினார். 

Trending

இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த மேக்ஸ் ஓடவுட் அரைசதம் கடந்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஓடவுட் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டாகி ஆட்டமிழந்தார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதனால் 20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது. நமீபியா அணி தரப்பில் ஜான் ஃபிரைலிங் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement