Advertisement

தி ஹண்ரட்: ரஷீத், ஹேல்ஸ் அதிரடியில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் த்ரில் வெற்றி!

தி ஹண்ரட் ஆடவர் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 27, 2021 • 11:28 AM
THE HUNDRED Men: Hales, Rashid Khan star in Rockets' memorable win
THE HUNDRED Men: Hales, Rashid Khan star in Rockets' memorable win (Image Source: Google)
Advertisement

தி ஹண்ரன் ஆட்டவர் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ட்ரெண்ட் ராக்கெஸ் அணி, நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ர சூப்பர் சார்ஜர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது. 

அதன்படி விளையாடிய அந்த அணி 99 பந்துகளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சிம்ப்சன் 42 ரன்களையும், ஹேரி ப்ரூக் 38 ரன்களையும் சேர்த்தனர். 

Trending


இதையடுத்து இலக்கை துரத்திய ராக்கெட்ஸ் அணியும் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் அலெக்ஸ் ஹேல்ஸ் - ரஷீத் கான் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தால் 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் ராக்கெட்ஸ் அணி இலக்கை எட்டி, 2 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தியது. 

இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய ரஷீத் கான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement