Advertisement

தி ஹண்ரட் மகளிர்: சாம்பியன் பட்டத்தை வென்றது ஓவல் இன்விசிபிள்!

அறிமுக சீசன் தி ஹண்ரட் மகளிர் தொடரில் ஓவல் இன்விசிபிள் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 21, 2021 • 22:34 PM
 The Hundred Womens : Oval Invincibles Women won by 48 runs
The Hundred Womens : Oval Invincibles Women won by 48 runs (Image Source: Google)
Advertisement

தி ஹண்ரட் மகளிர் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஓவல் இன்விசிபிள் மகளிர் - சதர்ன் பிரேவ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சதர்ன் பிரேவ் அணி முதலில் பந்துவீசத்தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய ஓவல் இன்விசிபிள் அணி 100 பந்துகள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 121 ரன்களை சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் வென் நிக்கெர்க், காப் தலா 26 ரன்களைச் சேர்த்தனர். 

Trending


இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய அணியில் முதல் மூன்று விக்கெட்டுகள் ரன்கள் ஏதுமின்றி காப் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.. 

பின்னர் வந்த வீராங்கனைகளும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணி 98 பந்துகளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 73 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஓவல் அணி தரப்பில் காப் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதன் மூலம் ஓவல் இன்விசிபிள் மகளிர் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அறிமுக சீசன் ஹண்ரட் தொடரில் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது. மேலும் இப்போட்டியில் சிறபான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவில் காப் ஆட்டநாயகியாகவும், டேன் வென் நிக்கெர்க் தொடர் நாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement