Advertisement

தி ஹண்ரட் மகளிர் : மந்தனா அதிரடியில் சதர்ன் பிரேவ் அபார வெற்றி!

தி ஹண்ரட் மகளிர் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சதர்ன் பிரேவ் அணி 8 விக்கெட் வித்தியாச்த்தில் வெல்ஷ் பையர் மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 27, 2021 • 22:48 PM
 The Hundred Womens : Southern Brave Women won by 8 wkts
The Hundred Womens : Southern Brave Women won by 8 wkts (Image Source: Google)
Advertisement

தி ஹண்ரட் மகளிர் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெல்ஷ் ஃபையர் மகளிர் அணி, சதர்ன் பிரேவ் மகளிர் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற சதர்ன் பிரேவ் அணி முதலில் பந்துவீசியது. 

அதன்படி களமிறங்கிய வெல்ஷ் ஃபையர் அணியில் ஹேலே மேத்யூசைத் தவிற மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், 100 பந்துகள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

Trending


இதில் அதிகபட்சமாக ஹேலே மேத்யூஸ் 33 ரன்களைச் சேர்த்தார். சதர்ன் பிரேவ் அணி தரப்பில் லாரன் பெல், அமந்தா வெல்லிங்டன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய சதர்ன் பிரேவ் அணிக்கு தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் அணிக்கு வெற்றியையும் தேடித்தந்தார். 

இதன் மூலம் சதர்ன் பிரேவ் அணி 84 பந்துகளிலேயே இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்மிருதி மந்தனா 61 ரன்களை விளாசி ஆட்டநாயகி விருதைத் தட்டிச்சென்றார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement