Advertisement

இங்கிலாந்து டெஸ்ட் தொடரை தவறவிட்ட ட்ரெண்ட் போல்ட்!

கரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக நியூசிலாந்து அணியின் ட்ரெண்ட் போல்ட், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan June 01, 2021 • 21:58 PM
Trent Boult Set To Miss Both England Tests, Will Be Available For WTC Final Against India
Trent Boult Set To Miss Both England Tests, Will Be Available For WTC Final Against India (Image Source: Google)
Advertisement

கரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பினர். 

இதில் மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த ட்ரெண்ட் போல்ட் தனது குடும்ப உறுப்பினர்களை காண்பதற்காக தனி விமானம் மூலம் நியூசிலாந்து செல்ல உள்ளார்.
 
இந்நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்காக நியூசிலாந்து அணி இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே இங்கிலாந்து சென்று தனிமைப்படுத்தப்பட்டனர். 

Trending


ஆனால் ட்ரெண்ட் போட்டி தாய்நாட்டில் இருந்ததால் அவரால் அணிக்குள் இணைய முடியவில்லை. மேலும் இங்கிலாந்தில் கட்டாயம் 14 நாள்கள் தனிமைப்படுத்த படுவது அவசியம் என்பதால், ட்ரெண்ட் போல்ட் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. 

மேலும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் ட்ரெண்ட் போல்ட் பங்கேற்பார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement