நான்கு பந்துகளில் 4 விக்கெட்டுகள்; சாதனைப் பட்டியளில் இணைந்த ஜேசன் ஹோல்டர்!
இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீசின் ஹோல்டர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றார்.
வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் மோதிய 5ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 162 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இப்போட்டியின் கடைசி ஓவரில் ஜேசன் ஹோல்டர் 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தினார்.இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என டி20 தொடரை கைப்பற்றியது.
Trending
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 5 விக்கெட்டும், ஹொசைன் 4 விக்கெட்டும் கைப்பற்றினர். இந்நிலையில், டி20 போட்டிகளில் 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய நான்காவது வீரர் எனும் பெருமையை ஜேசன் ஹோல்டர் பெற்றுள்ளார்.
Here we go …
— Diptiman Yadav (@diptiman_6450) January 31, 2022
6 6 6 6 -> W W W W
Bishi voice n reactions ahhh #JasonHolder #EngvWi #WivEng #Holder pic.twitter.com/t1eUWHCJl8
இவருக்கு முன்னதாக, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அயர்லாந்தின் காம்பெர், இலங்கையின் லசித் மலிங்கா மற்றும் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் ஆகியோர் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now