Advertisement

மகளிர் உலகக்கோப்பை 2022: பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!

மகளிர் உலகக்கோப்பை 2022: பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan March 11, 2022 • 14:36 PM
Women's CWC 2022: South Africa womens defeat Pakistan Womens by 6 runs
Women's CWC 2022: South Africa womens defeat Pakistan Womens by 6 runs (Image Source: Google)
Advertisement

நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் லீ, டஸ்மின் ப்ரிட்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

Trending


அதன்பின் களமிறங்கிய லாரா வோல்வார்ட் - கேப்டன் சுனே லஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். 

இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களைச் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஃபதிமா சனா, ஃபதிமா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி சித்ரா அமீன், பிஷ்மா மரூஃப் இணை சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர் 

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய நஹிதா கான் 40 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஓமைமா சோஹைல் - நிதா தார் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதமும் கடந்தனர். 

பின் ஓமைமா சோஹைல் 65 ரன்னிலும், நிதா தார் 55 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

இதனால் 49.5 ஓவர்களிலேயே பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்களை மட்டுமே சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சப்நிம் இஸ்மைல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தல் வெற்றிபெற்றது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement