Advertisement

ஜிம்பாப்வே vs இந்தியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்ட & ஃபேண்டஸி லெவன்!

ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை ஹராரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 16, 2022 • 11:32 AM
Zimbabwe vs India, 1st ODI - Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
Zimbabwe vs India, 1st ODI - Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
Advertisement

ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் நாளை ஹராரேவில் தொடங்குகிறது. 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - ஜிம்பாப்வே vs இந்தியா
  • இடம் - ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
  • நேரம் - மதியம் 12.45 மணி (இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம்

இந்த தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த் உள்ளிட்ட வீரர்களுக்கு ஒய்வு வழங்கப்பட்டு இருக்கிறது. முழு உடல் தகுதியை பெற்ற கேஎல் ராகுல் இந்திய அணிக்கு கேப்டனாக திரும்புகிறார். பல இளம் வீரர்களுக்கு இந்த தொடர் வாய்ப்பு வழங்கி உள்ளதால் இந்திய ரசிகர்களிடையே, இந்த தொடர் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடக்க வீரராக அனுபவ வீரர் ஷிகர் தவான் களமிறங்குவார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தவானுக்கு ஜோடியாக சுப்மான் கில் விளையாடினார். ஆனால் இந்த தொடரில் கேஎல் ராகுல் அணிக்கு திரும்பியதால், அவர் தொடக்க வீரராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த தொடரில் அனைவரின் எதிர்பார்ப்பையும் எற்படுத்தியுள்ளது இந்திய அணியின் நடுவரிசை தான். ஏனென்றால், இந்த தொடரில் முற்றிலும் பெரிய அனுபவம் இல்லாத வீரர்களையே இந்தியா தேர்வு செய்துள்ளது. 4ஆவது வீரராக தீபக் ஹூடாவும், 5ஆவது வீரராக சஞ்சு சாம்சனும் விளையாடலாம். 

அதேசமயம் ஆல் ரவுண்டரிகளில் ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேலுக்கு தேர்வுக்குழு வாய்ப்பு வழங்கியுள்ளது. இதைனைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய கூடிய வேகப்பந்துவீச்சாளராக சர்துல் தாக்கூர் அல்லது தீபக் சாரை தேர்வு செய்யலாம். இதே போன்று அவேஷ் கான், சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் கடைசி 3 இடத்தை பிடிக்கலாம்.

ஜிம்பாப்வே அணி கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று 60 ரன்கள், 8 விக்கெட்கள், 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் 3 போட்டிகளிலும் தோற்றது. இதனால், ஜிம்பாப்வே பலம் குன்றிய அணியாகத்தான் பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் சமீபத்தில், நல்ல பார்மில் இருக்கும் விதேசத்திற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதன்மூலம், இந்திய இளம் அணிக்கும் ஜிம்பாப்வே கடுமையான சவால்களை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 63
  • ஜிம்பாப்வே - 10
  • இந்தியா - 51
  • டிரா - 2

உத்தேச அணி

ஜிம்பாப்வே - தகுத்ஸ்வானாஷே கைடானோ, தடிவானாஷே மருமணி, இன்னசென்ட் கையா, வெஸ்லி மாதேவேரே, சிக்கந்தர் ராசா, ரெஜிஸ் சகப்வா (கே), டோனி முனியோங்கா, லூக் ஜாங்வே, பிராட் எவன்ஸ், விக்டர் நயாச்சி, தனகா சிவாங்கா
    
இந்தியா - கேஎல் ராகுல் (கே), ஷிகர் தவான், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், தீபக் சாஹர்
   
ஃபேண்டஸி லெவன்

  •      விக்கெட் கீப்பர் - ரெஜிஸ் சகப்வா, சஞ்சு சாம்சன்
  •      பேட்டர்ஸ் – கேஎல் ராகுல், தீபக் ஹூடா, இன்னசென்ட் கயா
  •      ஆல்-ரவுண்டர்கள் - அக்சர் படேல், வெஸ்லி மாதேவெரே, சிக்கந்தர் ராசா
  •      பந்துவீச்சாளர்கள் - விக்டர் நியுச்சி, முகமது சிராஜ், தீபக் சாஹர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement