ஆஃப்கானிஸ்தான் அணியானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளௌயாடி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றிபெற்று தொடரை வெல்லும் உத்வேகத்துடன் ஆஃப்கானிஸ்தான் அணியும், முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் தென் ஆப்பிரிக்க அணியும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இன்றைய போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியை மீண்டும் டெம்பா பவுமா வழிநடத்துகிறார்.
அதேசமயம் ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் குல்பதீன் நைப் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டு இக்ரம் அலிகில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்: ரீசா ஹென்ட்ரிக்ஸ், டோனி டி ஸோர்ஸி, டெம்பா பவுமா(கே), ஐடன் மார்க்ரம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரைன், வியான் முல்டர், ஜார்ன் ஃபோர்டுயின், நந்த்ரே பர்கர், நகாபா பீட்டர், லுங்கி இங்கிடி
ஆப்கானிஸ்தான் உத்தேச லெவன்: ரஹ்மானுல்லா குர்பாஸ், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கே), அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, இக்ரம் அலிகில், ரஷித் கான், நங்கேயாலியா கரோட், அல்லா கசன்ஃபர், ஃபசல்ஹாக் ஃபருக்கி.