ஆசிய கோப்பை தொடரின் 15ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தீர்மானித்தது.
மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஹாங்காங்: நிசாகத் கான்(கே), யாசிம் முர்தாசா, பாபர் ஹயாத், கிஞ்சித் ஷா, அய்சாஸ் கான், ஸ்காட் மெக்கெக்னி, ஜீஷன் அலி, ஹாரூன் அர்ஷாத், எஹ்சான் கான், ஆயுஷ் சுக்லா, முகமது கசன்ஃபர்
இந்தியா: ரோஹித் சர்மா(கே), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.