ஆசியக் கோப்பையில் இன்று (செப்டம்பர் 2) நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஹாங் காங் பந்து வீச்சை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகளுக்கு இடையேயான இன்றையப் போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹாங் காங் அணியின் கேப்டன் நிஷாகத் கான் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் இந்தியாவிடம் மோதி தோல்விடைந்தன. இந்நிலையில், இன்றையப் போட்டி இரு அணிகளுக்கும் ’சூப்பர் 4’ போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான வாழ்வா? சாவா? போட்டியாகும். இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெறும்.
பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம்(கே), ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஷதாப் கான், ஆசிப் அலி, முகமது நவாஸ், ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா, ஷாநவாஸ் தஹானி.
ஹாங்காங்: நிஜாகத் கான்(கே), யாசிம் முர்தாசா, பாபர் ஹயாத், கிஞ்சித் ஷா, அய்சாஸ் கான், ஜீஷன் அலி, ஸ்காட் மெக்கெக்னி, ஹாரூன் அர்ஷாத், எஹ்சான் கான், ஆயுஷ் சுக்லா, முகமது கசன்ஃபர்.