ஆசியக் கோப்பை தொடர் 2018ஆம் ஆண்டிற்கு பிறகு, இன்றுமுதல் செப்டம்பர் 11ஆம் தேதிவரை அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கு இந்தியா, பாகிஸ்தான், ஹாங்ஹாங், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் அணிகள் தகுதிபெற்றுள்ளன.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இதில், அண்மையில் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான 19 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா, இன்றைய இந்தியாவிற்கு எதிரான போட்டியில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார்.
பாகிஸ்தான் : பாபர் அசாம்(கே), முகமது ரிஸ்வான், ஃபகார் ஸமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிப் அலி, ஷதாப் கான், முகமது நவாஸ், நசீம் ஷா, ஹாரிஸ் ரவூஃப், ஷாநவாஸ் தஹானி.
இந்தியா: ரோஹித் சர்மா(கே), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.