AUS vs WI, 1st T20I: டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு!
வெஸ்ட் இண்டீஸில் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி சமன்செய்த நிலையில், ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவி ஆஸ்திரேலியாவிடம் ஒயிட் வாஷ் ஆனது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20…
வெஸ்ட் இண்டீஸில் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி சமன்செய்த நிலையில், ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவி ஆஸ்திரேலியாவிடம் ஒயிட் வாஷ் ஆனது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இதில் இன்று நடைபெறும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதாலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே ஒருநாள் தொடரை முழுமையாக இழந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அதற்கு டி20 தொடரில் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ்(கே), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டொய்னிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட், சீன் அபோட், ஆடம் ஸாம்பா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஜோஷ் ஹசில்வுட்.
வெஸ்ட் இண்டீஸ்: பிராண்டன் கிங், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன், ஷாய் ஹோப், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரோவ்மேன் பவல்(கே), ஆண்ட்ரே ரஸல், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், அகீல் ஹொசைன், அல்சாரி ஜோஸப், குடாகேஷ் மோட்டி.