ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலையும் வகித்து வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேனில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட டிராவிஸ் ஹெட்டிற்கு, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கேமரூன் க்ரீனிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் கேமரூன் க்ரீன் கரோனா தொற்றிலிருந்து மீளாததால் அவர் சக வீரர்களுடன் அல்லாமல் தனிமைப்படுத்தப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா : உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லபுஷாக்னே, கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ்(கே), நாதன் லையன், ஜோஷ் ஹசில்வுட்
வெஸ்ட் இண்டீஸ்: கிரேய்க் பிராத்வைட்(கே), டெக்னரைன் சந்தர்பால், கிர்க் மெக்கென்ஸி, அலிக் அதானாஸ், கவேம் ஹாட்ஜ், ஜஸ்டின் க்ரீவ்ஸ், ஜோசுவா டா சில்வா, கெவின் சின்க்ளேர், அல்ஸாரி ஜோசப், கெமர் ரோச், ஷமர் ஜோசப்.