ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதலில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்: கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், பிராண்டன் கிங், நிக்கோலஸ் பூரன்(கே),ரோவ்மேன் பவல், ஜேசன் ஹோல்டர், ஒடியன் ஸ்மித், அகேல் ஹொசைன், யானிக் கரியா, அல்சாரி ஜோசப், ஓபேட் மெக்காய்
ஆஸ்திரேலியா : டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கே), ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், கேமரூன் கிரீன், மேத்யூ வேட், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.