வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முந்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் வங்கதேச அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி தாக்காவில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான இரு அணிகளிம் மாற்றங்கள் ஏதுமின்றி விளையாடுகின்றன.
வங்கதேசம்(விளையாடும் XI): சௌமியா சர்கார், முகமது நைம், ஷகிப் அல் ஹசன், நூருல் ஹசன், மஹ்முதுல்லா (கே), அஃபிஃப் ஹொசைன், ஷமிம் ஹொசைன், மஹேதி ஹசன், முஸ்தாபிசூர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், நசும் அகமது
ஆஸ்திரேலியா (விளையாடும் XI): ஜோஷ் பிலிப்பே, அலெக்ஸ் கேரி, மிட்செல் மார்ஷ், மோசிஸ் ஹென்றிக்ஸ், ஆஷ்டன் டர்னர், மத்யூ வேட் (கே), ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க், ஆண்ட்ரூ டை, ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.