வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மழையால் பாதியிலெயே ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று செல்ஹேட்டில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
அயர்லாந்து: ஸ்டீபன் டோஹனி, பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி(கே), ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், ஆண்டி மெக்பிரைன், மார்க் அடேர், கிரஹாம் ஹியூம், மேத்யூ ஹம்ப்ரேஸ்.
வங்கதேசம்: தமிம் இக்பால்(கே), லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷகிப் அல் ஹசன், தவ்ஹித் ஹ்ரிடோய், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, எபாடோட் ஹொசைன், நசும் அகமது, முஸ்தாபிசூர் ரஹ்மான்