இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று தாக்காவில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
வங்கதேசம்: தமிம் இக்பால், லிட்டன் தாஸ்(கே), தன்சித் ஹசன், சௌமியா சர்க்கார், மஹ்முதுல்லா, தஹித் ஹிரிடோய், மஹேதி ஹசன், கலீத் அகமது, நசும் அகமது, முஸ்தாபிசூர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத்
நியூசிலாந்து: ஃபின் ஆலன், வில் யங், சாத் போவ்ஸ், ஹென்றி நிக்கோல்ஸ், டாம் ப்ளூன்டெல், ரச்சின் ரவீந்திரா, கோல் மெக்கன்சி, கைல் ஜேமிசன், இஷ் சோதி, லாக்கி ஃபெர்குசன் (கே), டிரென்ட் போல்ட்