வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தாக்காவில் நடந்து முடிந்தது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன, டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று (அக்டோபர் 29) சட்டோகிராமில் உள்ள ஜாஹுர் அகமது சவுத்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்கம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இப்போட்டிக்கான இரு அணிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இரு அணி கேப்டன்களும் அறிவித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்: ஐடன் மார்க்ரம்(கே), டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், ரியான் ரிக்கல்டன், கைல் வெர்ரைன், செனுரன் முத்துசாமி, வியான் முல்டர், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, டேன் பேட்டர்சன்.
வங்கதேசம் பிளேயிங் லெவன்: ஷத்மன் இஸ்லாம், ஸகிர் ஹசன், மஹ்முதுல் ஹசன் ஜாய், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கே), மொமினுல் ஹக், முஷ்ஃபிக்கூர் ரஹீம், மஹிதுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், நஹித் ராணா