BAN vs SL, Asia Cup 2023: டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி பேட்டிங் தேர்வு!
நடப்பாண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அதன்படி பல்லகலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இரு அணிகளிலும் உள்ள நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளதால் இப்போட்டியில் இரு அணிகளும் எப்படி…
நடப்பாண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அதன்படி பல்லகலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இரு அணிகளிலும் உள்ள நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளதால் இப்போட்டியில் இரு அணிகளும் எப்படி செயல்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இலங்கை: பாதும் நிஷங்கா, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனகா(கே), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, மதீஷா பதிரான
வங்கதேசம் : முகமது நைம், தன்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தவ்ஹித் ஹிரிடோய், ஷாகிப் அல் ஹசன்(கே), முஷ்பிக்கூர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிசூர் ரஹ்மான்.