வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில் இத்தொடரின் கடைசி ஒருநாள் போட்டி இன்று சட்டோகிராம் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போடியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ஏற்கெனவே வங்கதேச அணி முதலிரண்டு போட்டிகளில் தோல்விடைந்த நிலையில் ஆறுதல் வெற்றியையாவது பதிவுசெய்ய போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேசம்: தமீம் இக்பால் (கே), லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாந்தோ, முஷ்பிகுர் ரஹீம் , ஷகீப் அல் ஹசன், மஹ்முத்துல்லா, அஃபிஃப் ஹொசைன், மெஹிடி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், எபாடோட் ஹொசைன், முஸ்டபிசூர் ரஹ்மான்.
இங்கிலாந்து: ஜேசன் ராய், பிலிப் சால்ட், தாவிட் மாலன், ஜேம்ஸ் வின்ஸ், ஜோஸ் பட்லர் (கே), சாம் கரன், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், ரெஹான் அகமது, ஆதில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர்.