வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று தாக்காவிலுள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
இங்கிலாந்து: ஜேசன் ராய், பிலிப் சால்ட், டேவிட் மாலன், ஜேம்ஸ் வின்ஸ், ஜோஸ் பட்லர்(கே), வில் ஜாக்ஸ், மொயீன் அலி, சாம் கரன், அடில் ரஷித், சாகிப் மஹ்மூத், மார்க் வூட்.
வங்கதேசம்: தமீம் இக்பால்(கே), லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா, அபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, தைஜுல் இஸ்லாம், முஸ்தபிசுர் ரஹ்மான்.