ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி போட்டிகள் நேற்று தொடங்கியது.
இரண்டாம் நாளான இன்று நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் கௌகாத்தியில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
இந்தியா: ரோஹித் சர்மா (கே), ஷுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி
இங்கிலாந்து: டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர்(கே), லியாம் லிவிங்ஸ்டோன், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், சாம் கரன், டேவிட் வில்லி, ஆதில் ரஷித், கஸ் அட்கின்சன், ரீஸ் டாப்லி, மார்க் வுட்.