ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்று தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதுகின்றன. 46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 48 ஆட்டங்கள் 10 நகரங்களில் நடைபெறுகின்றன.
தொடரின் தொடக்க நாளான இன்று நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து கடந்த முறை இரண்டாம் இடம் பிடித்த நியூஸிலாந்து அணி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட்,ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர் (கே), லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட்.
நியூசிலாந்து: டெவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம்(கே), கிளென் பிலீப்ஸ், மார்க் சாப்மேன், மேட் ஹென்றி, மிட்செல் சான்ட்னர், ஜேம்ஸ் நீஷம், டிரென்ட் போல்ட்.