ஜிம்பாப்வேவியில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் சூப்பர் 6 சுற்றின் 6ஆவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே - ஸ்காட்லந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
புலவாயோ நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்து ஸ்காட்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இரு அணிகளும் இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
ஜிம்பாப்வே: ஜாய்லார்ட் கும்பி, கிரேக் எர்வின்(கே), இன்னசென்ட் கையா, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ரஸா, ரியான் பர்ல், வெஸ்லி மாதேவெரே, வெலிங்டன் மசகட்சா, ரிச்சர்ட் ங்கராவா, டெண்டாய் சதாரா, பிளஸ்ஸிங் முசரபானி
ஸ்காட்லாந்து: கிறிஸ்டோபர் மெக்பிரைட், மேத்யூ கிராஸ், பிராண்டன் மெக்முல்லன், ஜார்ஜ் முன்சி, ரிச்சி பெரிங்டன்(கே), தாமஸ் மெக்கிண்டோஷ், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், சஃப்யான் ஷெரீப், கிறிஸ் சோல்.