ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. அதுமட்டுமின்றி எப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளதால் இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.
அந்தவகையில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் குரூப் சி குழுவில் இடம்பிடித்துள்ள தொடரை நடத்தும் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியும், அறிமுக உலகக்கோப்பை தொடரில் விளையாடும் பப்புவா நியூ கினியா அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
பப்புவா நியூ கினியா: டோனி உரா, செசே பாவ், அசாத் வாலா (கே), லெகா சியாக்கா, ஹிரி ஹிரி, சார்லஸ் அமினி, கிப்ளின் டோரிகா, அலி நாவோ, சாட் சோப்பர், கபுவா மோரியா, ஜான் கரிகோ
வெஸ்ட் இண்டீஸ்: ஜான்சன் சார்லஸ், பிராண்டன் கிங், ரோஸ்டன் சேஸ், நிக்கோலஸ் பூரன், ரோவ்மன் பவல்(கே), ஆண்ட்ரே ரஸல், ரொமாரியோ ஷெப்பர்ட், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், அகேல் ஹொசைன், அல்ஸாரி ஜோசப், குடகேஷ் மோட்டி.