நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதலில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதையடுத்து இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணியில் லுக் வுட்டிற்கு ஓய்வளிக்கப்பட்டு, அறிமுக வீரரான கஸ் அட்கின்சன்னுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.
இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், வில் ஜாக்ஸ், டேவிட் மாலன், ஹாரி ப்ரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜோஸ் பட்லர்(கே), மொயீன் அலி, சாம் கரன், அடில் ரஷித், பிரைடன் கார்ஸ், கஸ் அட்கின்சன்
நியூசிலாந்து : டெவோன் கான்வே, ஃபின் ஆலன், டிம் சீஃபர்ட் , க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, இஷ் சோதி, டிம் சவுத்தி (கே), லோக்கி ஃபர்குசன்.